முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களது பெயரை சொல்லக்கூட பிரதமர் மோடிக்கு மனமில்லை : கனிமொழி எம்.பி. ஆதங்கம்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      தமிழகம்
Kanimozhi

Source: provided

சென்னை : மேடையில் எங்களது பெயரை சொல்லக் கூட பிரதமருக்கு மனமில்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார். 

சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது:-

குலசேகரப்பட்டினம் திட்டம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை தி.மு.க.  அரசு தொடர்ந்து எடுத்தது. குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு அடிக்கல், தி.மு.க. அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். 

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கால்வாசிதான் மத்திய அரசு நிதி வழங்குகிறது. முக்கால்வாசி மாநில அரசு நிதியில்தான் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. பிற மாநிலங்களில் இருந்து வந்து இத்திட்டத்தை பார்வையிடும் எம்.பி.க்கள் இதை ஏன் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டம் என குறிப்பிடப்படவில்லை என கேள்வி எழுப்புகின்றனர். 

மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. நல்ல திட்டங்களை தி.மு.க. எப்போதும் எதிர்ப்பதில்லை. தேர்தல் நேரம் என்பதால் திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இதுவரை தமிழக முதல்வர்  வைத்த ஒரு கோரிக்கையை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை.  

தி.மு.க. அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர். குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை மாநில அரசுதான் வழங்கியது.  மேடையில் எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை. 

முதல்வரின் கனவு திட்டம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அரசியல் வேறு, மதம் வேறு என்பதை உணர்ந்தவர்கள் தமிழக மக்கள். தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம் தி.மு.க.  என்பதை மக்கள் அறிவர். இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து