முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை திரிஷா விவகாரம்: மன்சூர் அலிகானுக்கு விதித்த அபராதம் ரத்து

வியாழக்கிழமை, 29 பெப்ரவரி 2024      சினிமா
Mansoo-Alikhan-

சென்னை, நடிகை திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

தனது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, ஐகோர்ட் நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மன்சூர் அலிகான் தரப்பில், திரிஷா, குஷ்பு ஆகியோர் தமிழகத்தில் இருக்கும் நிலையில், சிரஞ்சீவி மட்டும் ஆந்திராவில் இருப்பதால் தான் அவருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்ததாகவும், ஆனால் வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், மற்ற இருவர் மீதான வழக்கையும் தொடர விரும்பவில்லை எனவும் மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டனர். அதே சமயம், வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து