முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி தலைமை அறிவித்தால் பார்லி. தேர்தலில் போட்டி : அண்ணாமலை பரபரப்பு பேட்டி

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      தமிழகம்
Annamalai 2

Source: provided

சென்னை : கட்சி தலைமை அறிவித்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும், எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் எனவும் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ.க. முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை விரைவில் வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.  மேலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை தேர்தலில் களம் இறக்க பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் தேதியை இந்த மாதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பிரதமர் நரேந்திர மோடி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள், இணை பொறுப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், சென்னையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், “கட்சி தலைமை என்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன். பிரச்சாரம் மேற்கொள்ள சொன்னால் பிரச்சாரம் செய்வேன். ஆனால் எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது. கட்சித் தலைமையின் முடிவு எனது முடிவு” என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து