முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      இந்தியா
Modi-1 2023 04 03

புது டெல்லி, இயேசு கிறிஸ்துவின் ஈடில்லா தியாகத்தை நினைவுகூர்வோம் என்று  புனித வெள்ளியையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும்  வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். 

இயேசு சிலுவையில் உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. உயிர்த்தெழுந்தநாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.தவக்காலத்தின் இறுதி வாரத்தின் தொடக்கமாக கடந்த 24-ம் தேதி  குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. 

தாழ்மையின் உருவேயான இயேசு தம்முடைய சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, நான் உங்களில் அன்பாய் இருப்பது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள் என்றார். அன்றைய நாள் பெரிய வியாழனாக அனுசரிக்கப்படுகிறது. இதை நினைவுகூரும் வகையில் நேற்று முன்தினம் பெரிய வியாழன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில், நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் நேற்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

புனிதவெள்ளியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டிருப்பதாவது, 

இந்த புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்துவின் ஈடில்லா தியாகத்தை நினைவுகூர்வோம். அந்த தியாகம் நமக்கு கற்பிக்கும் இரக்கம் மற்றும் மன்னிப்பின் மூலம் பலம் பெறுவோம் என பதிவிட்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து