முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் உயர்வு

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

தங்கத்தின் விலை ஏறியும்,  இறங்கியும் வருவது வழக்கம்.  இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55,000 கடந்தது.  தொடர்ந்து அதிகரித்து வரும் விலை, நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1.160 குறைந்து ரூ.53,600-க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ. 6,700-க்கு விற்பனையானது.

கடந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,160 குறைந்தது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்திய நிலையில், நேற்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.53,840-க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.6.730-க்கு விற்பனையானது.வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.86.50-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து