முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை, தமிழகத்திற்கு உண்டு : தர்மபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

தர்மபுரி : பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை, தமிழ்நாட்டுக்கு உண்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதி இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.,  நடக்க இருப்பது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டுமென்றால், பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி பா.ஜ.க.. பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை, தமிழ்நாட்டுக்கு உண்டு.

சமூக நீதி பேசும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. சமூக நீதி பேசும் ராமதாஸ் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எப்படி?. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை பா.ம.க.வினரே ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். பா.ம.க.வின் கொள்கைக்கு முற்றிலும் நேர்மறையான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க.. மனமில்லாமல் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி ஏன் அமைத்தது என்பது அக்கட்சியினருக்கே தெரியும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராமதாசுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உறுதி கொடுத்தாரா?. பழங்குடியின, பட்டியலின மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு. அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் மாறி மாறி வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக குற்றம் சொல்கின்றனர். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக திமுக போராடியது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து