முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.பி. போட்டியில் 9 முறை இறுதிக்கு தகுதி: பயேஸின் சாதனையை சமன் செய்த ரோகன் போபண்ணா

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      விளையாட்டு
Leander-Bopanna 2024-03-29

Source: provided

மியாமி : ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் போட்டியில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லியாண்டர் பயேஸின் சாதனையை சமன் செய்த 2-வது இந்தியர் ஆனார் ரோகன் போபண்ணா.

மியாமி ஓபனில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, மார்சன் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்)- ஹொராசியோ ஜெபலாஸ் (அர்ஜென்டியா) ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 6-1, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அரையிறுதிக்கு.... 

துபாய் சாம்பியன்ஷிப் காலிறுதியில் தோல்வி, இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் ரவுண்ட் ஆஃப் 32-ல் வெளியேற்றம் ஆகியவை காரணமாக இரட்டையர் பிரிவில் போபண்ணா 2-வது இடத்திற்கு பின்தங்கினார். தற்போது மியாமி ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார். ஆஸ்திரேலிய ஓபனில் பதக்கம் வென்றதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். மேலும், தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த வயதான வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இறுதிப் போட்டி... 

போபண்ணா ஜோடி இறுதிப் போட்டியில் இவான் டோடிக் (குரோசியா)- ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது. போபண்ணாவின் 14-வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டியாகும். மேலும், மியாமி தொடரில் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார். ஏடிபி தொடர் அளவிலான 63-வது இறுதிப் போட்டி இதுவாகும். இரட்டையர் பிரிவில் 25 சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஐந்தாவது முறை... 

போபண்ணா- எப்டன் ஜோடி ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடரின் இறுதிப் போட்டியில் ஐந்தாவது முறையாக களம் காண்கிறது. லியாண்டர் பயேஸ்க்குப் பிறகு அனைத்து வகையிலான 9 ஏடிபி மாஸ்டர்ஸ் (9) தொடரிலும் இறுதிப் போட்டிக்கு நுழைந்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார்.

ரோகன் - மேத்யூ...

முன்னதாக நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் அர்ஜெண்டினாவின் ஹோராசியோ ஜெபலோஸ் இணையை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட போபண்ணா இணை 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மார்செல் கிரானோலர்ஸ் - ஹோராசியோ ஜெபலோஸ் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து