முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பத்தூர் காய்கறி சந்தையில் பொதுமக்களிடம் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      தமிழகம்
EPS 2024-04-02

Source: provided

தி.மலை : திருப்பத்தூரில் உள்ள காய்கறி சந்தை பகுதியில் நடந்து சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு பொதுமக்கள், வியாபாரிகளிடம் அ.தி.மு.க. வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில்  39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், திருவண்ணாமலை அ.தி.மு.க. வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.  திருப்பத்தூரில் உள்ள காய்கறி சந்தை பகுதியில் நடந்து சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு பொதுமக்கள், வியாபாரிகளிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

பின்னர் அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நடந்து சென்ற எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவண்ணாமலை தொகுதியில்  தி.மு.க. வேட்பாளராக அண்ணாதுரை, பா.ஜ.க. வேட்பாளராக அஸ்வத்தாமன், நாம் தமிழர் வேட்பாளராக ரமேஷ்பாபு ஆகியோர் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து