முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.52 ஆயிரத்தை எட்டியது ஒரு பவுன் தங்கம் விலை

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.52000-க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அந்த வகையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது.  தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430-க்கும்,  சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கு விற்பனையானது.

இந்நிலையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500-க்கும்,  சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் முதன்முறையாக ரூ. 52,000ஐ தொட்டுள்ளது. 

இந்த விலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் அதிரடியாக அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.84-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ.84,000-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து