முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்வன் விமர்சனம்

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2024      சினிமா
Galvan-review 2024-04-08

Source: provided

வனப்பகுதியை ஒட்டியுள்ள, யானைகள் அடிக்கடி வந்து போகும் ஆபத்துமிக்க  கிராமத்தில் வசித்து வரும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார், தனது நண்பர் தினாவுடன் சேர்ந்து திருடுவது, மது அருந்துவது என பொழுதை கழிக்கிறார்.

இதற்கிடையே நாயகி இவானாவை சந்திக்க அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால், ஜி.வி-யின் காதலை இவான நிராகரிக்க, அவரை விடாமல் துரத்துகிறார். அவருக்காக ஆதரவற்ற முதியவர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தத்தெடுக்கிறார். காதலுக்காக தான் ஆதரவற்ற முதியவரை ஜி.வி.பிரகாஷ் குமார் தத்தெடுத்தார், என்று அவரது நண்பர் நினைக்கும் போது. தத்தெடுப்புக்கு பின்னணியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் அதிர்ச்சியளிக்கும் திட்டம் பற்றி தெரிய வருகிறது.

அது என்ன? என்பதையும், அவரது திட்டமும், காதலும் நிறைவேறியதா? என்பதை சொல்வது தான் ‘கள்வன்’. வழக்கமான ஜி.வி.பிரகாஷாக ஆரம்பத்தில் வலம் வந்தாலும், காதல் நிராகரிப்படும் போது கலங்கும் காட்சிகளில் நடிப்பில் ஜொலிப்பவர், பாராதிராஜாவை வைத்து போடும் திட்டத்தால் வில்லத்தனமான நடிப்பையும் வெளிக்காட்டி மிரட்டுகிறார். 

நாயகியாக நடித்திருக்கும் இவானா, சிரித்த முகத்தோடு ரசிகர்களை கவர்கிறார். முதிர்ச்சியான வயதில் தாத்தாவாக நடிப்பில் பட்டையை கிளப்புகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் புத்துணர்ச்சியை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ரேவாவின் பின்னணி இசை கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

யானை விரட்டும் கிளைமாக்ஸ் காட்சியில் இருந்த விறுவிறுப்பு மற்றும் யானையிடம் இருந்த பிரமாண்டம், படம் முழுவதும் இருந்திருந்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுத்திருக்கும். இருந்தாலும், காதல், காமெடி, துரோகம், செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களையும் அளவாக கையாண்டு அனைத்து தரப்பினருக்குமான படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் பி.வி.சங்கர், விலங்குகள் மூலம் சிறுவர்களையும் ஈர்த்துவிடுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து