முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உகாதியை முன்னிட்டு 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் ..!

செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Tirupati 2024-04-08

திருப்பதி, உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலை,  திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுமார் 10 டன் எடையுடைய பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரித்துள்ளது.

தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான உகாதி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.  உகாதி என்ற பெயரில் ஆந்திரா,  தெலங்கானா மக்களும் யுகாதி என்ற பெயரில் கர்நாடகா மக்களும் வருடப்பிறப்பை கொண்டாடுகின்றனர்.  இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு, சுமார் 10 டன் எடையுள்ள வண்ணமலர்களால் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  உள்நாட்டு மலர்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மலர்களை பயன்படுத்தி கோயில் முன் வாசல்,  தங்க கொடிமரம்,  கோயிலின் உட்பகுதி என அனைத்து பகுதிகளையும் தேவஸ்தான நிர்வாகம் கண்கவர் வகையில் அலங்கரித்துள்ளது.  மேலும் பல்வேறு பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வந்திருக்கும் பக்தர்கள் மெய்மறந்து,  மலர் அலங்காரங்களை  பார்த்து ரசித்து செல்கின்றனர்.  இதனைத்தொடர்ந்து நேற்று உகாதியை முன்னிட்டு காலை 10 மணிக்கு ஆஸ்தானம் தொடங்கியது.  அப்போது தேவஸ்தான வேத பண்டிதர்கள் புதுவருட பஞ்சாங்கத்தை படித்து பலன்களை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து