முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படுகர் இன மக்களுக்கு சான்று கிடைக்க தி.மு.க. அரசு தடையாக உள்ளது : எல்.முருகன் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      தமிழகம்
Murugan 2024-02-14

Source: provided

ஊட்டி : 'நீலகிரி படுகர் இன மக்களுக்கு பழங்குடியினருக்கான எஸ்.டி., சான்று கிடைப்பதற்கு தடையாக தி.மு.க., அரசு உள்ளது என பா.ஜ.க. வேட்பாளர் எல். முருகன் குற்றம் சாட்டினார்.

ஊட்டி அருகே நுந்தாள கிராமத்தில், படுகர் இன மக்களிடம் பா.ஜ.க. வேட்பாளர்  எல்.முருகன் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: 

மத்திய பழங்குடியினர் துறை படுகர் இன மக்களை பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதற்கான விபரங்களை மாநில அரசின் இருமுறை கேட்டுள்ளது. மாநில அரசு படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

படுகர் இன மக்களுக்கு பழங்குடியினருக்கான எஸ்.டி., சான்று கிடைப்பதற்கு தடையாக தி.மு.க., அரசு உள்ளது. இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்று வரும் போது, நிச்சயம் படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். இதனை கேட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து