முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து

புதன்கிழமை, 24 டிசம்பர் 2025      தமிழகம்
eps

சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிறிஸ்த மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் இன்று கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமானஎடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை, கிறிஸ்துமஸ் பெருநாளாகக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும், எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 

'மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை' என்ற இயேசுபிரான் அவர்களுடைய போதனைக்கு ஏற்ப, ஒவ்வொரு மனிதரும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். இயேசுபிரானின் போதனைகளை கடைபிடித்தால், நாம் விரும்பியதை இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில், உலகெங்கும் அன்பு தவழவும், அமைதி நிலவவும், சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கவலைகள் மறந்து இன்பம் புகுந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு, இயேசுபிரான் அவதரித்த திருநாளைக் கொண்டாடி மகிழும், என் அன்பிற்கினிய கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவரும், எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும், தங்கள் வாழ்வில் நிறைவான கல்வியும், குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நொய் நொடியில்லாமல் நலமுடன் வாழ்ந்திடவும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், எனது இதயமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து