முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழைகளுக்கான அரசு என பிரதமர் புளுகுகிறார்; ஜி.எஸ்.டி. வரி அல்ல… வழிப்பறி: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும்,  ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் பிரதமர் மோடி புளுகுவதாக குற்றம்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜி.எஸ்.டி. வரி அல்ல… வழிப்பறி என காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு போதிய நிதி பகிர்வு அளிக்காமல் மத்திய அரசு பாராமுகம் காட்டுவதாக ஆளும் தி.மு.க விமர்சித்து வருகிறது.  முதல்வர் மு.க ஸ்டாலினும் தனது தேர்தல் பிரசாராத்தில் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில்,  தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக பதிவிட்டிருப்பதாவது: 

“தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக  இருந்த போது எதிர்த்த நரேந்திர மோடி,  பிரதமரானதும்,  “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்” என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.  ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால்,  பில்-இல் உள்ள ஜி.எஸ்.டி-யைப் பார்த்து புலம்புகின்றனர்! அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜி.எஸ்.டி கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.  33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகிறது.  வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது.  இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.  ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து