முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க.-வின் தலைவர் அன்புமணிதான்: டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் உறுதிசெய்த தேர்தல் ஆணையம்

திங்கட்கிழமை, 9 பெப்ரவரி 2026      இந்தியா
Election-Commision 2023-04-20

டெல்லி, பா.ம.க.வின் தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி செய்த நிலையில், இந்த நடவடிக்கை ராமதாஸ் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்படாத கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் ஆணையம் முடிவு செய்ய முடியாது என்ற உத்தரவை மாற்றக்கோரி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்சி உரிமை கோரல் பிரச்சனை எழுவதற்கு முன்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பா.ம.க. விஷயத்தில் முடிவெடுத்துள்ளது பற்றி தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம், தேர்தல் ஆணையம் அன்புமணியை பா.ம.க. தலைவராக ஏற்கனவே அங்கீகரித்ததை தெளிவாக்கியுள்ளது.

தற்போதைய சூழலில் நீதிமன்றம் பா.ம.க. கட்சி வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பா.ம.க.வின் தலைவர், நிர்வாகிகள் யார் என்பதை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்தக்கு தடை இல்லை என்ற வாதத்தை பதிவு செய்கிறோம் என்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை மட்டுமே பதிவு செய்கிறோம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து