முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா அணு ஆயுத சோதனை மேற்கொண்டது: அமெரிக்கா

சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2026      உலகம்
America 2024-04-22

நியூயார்க், இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா ரகசிய அணு ஆயுத சோதனை மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

கடத்த ஆண்டு பிரதமர் மோடி, ஜிஜின்பிங் சந்திப்பின் பின் உறவு சற்று சீரானது. ஆனால் இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில், சீனா தங்கள் பக்கம் உள்ள பகுதியில் தொடர்ந்து பல்வேறு கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. இவை ராணுவ கட்டுமானங்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் கல்வான் தாக்குதலுக்கு சரியாக ஒரு வாரம் கழித்து, ஜூன் 22-23 தேதிகளில் சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்தியதாக அமெரிக்கா தற்போது குற்றம்சாட்டி உள்ளது. வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள லோப் நூர் சோதனைத் தளத்தில் இந்த ரகசிய அணு ஆயுதச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அணுசக்தி சோதனைத் தடை ஒப்பந்தத்தை மீறி, தீவிரமான சோதனையில் ஈடுபட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், தாங்கள் சர்வதேச விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து