முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரக்கு கப்பலில் சிக்கிய 17 மாலுமிகளை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      உலகம்
Iran-2 2024-04-15

Source: provided

டெஹ்ரான் : ஈரான் சிறை பிடித்த சரக்கு கப்பலில் உள்ள இந்தியர்களை சந்திப்பதற்கு வேண்டிய அனுமதியை ஈரான் அளிக்கும் என அந்நாட்டின் வெளியுறவு மந்திரி கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து எம்.எஸ்.சி. ஏரீஸ் என பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. போர்ச்சுகீசிய கொடியுடன் கூடிய அந்த கப்பலில், இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷியா மற்றும் எஸ்தோனியா நாடுகளை சேர்ந்தவர்கள் என மொத்தம் 25 மாலுமிகள் இருந்துள்ளனர்.

இதில், இந்தியாவை சேர்ந்த 17 மாலுமிகளும் அடங்குவார்கள். இந்நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த சிறப்பு கடற்படை வீரர்கள், அந்த கப்பலை சிறை பிடித்தனர். இந்த கப்பல் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில், ஈரானின் வெளியுறவு துறை மந்திரி உசைன் அமீர்-அப்துல்லாஹியான் கூறியபோது, ஹார்முஜ் ஜலசந்தி பகுதியருகே ஈரான் ராணுவம் சிறை பிடித்த சரக்கு கப்பலில் இருந்த 17 இந்திய மாலுமிகளை சந்திப்பதற்கு இந்திய அதிகாரிகளுக்கு ஈரான் அனுமதி அளிக்கும் என கூறியுள்ளார்.

இதுபற்றி மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கரிடம் தொலைபேசி வழியே அவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, கப்பலில் உள்ள இந்தியர்களை விடுவிக்கும்படி ஜெய்சங்கர் கேட்டு கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து