முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாட்டில் ரோடு ஷோ மூலம் ராகுல் காந்தி வாக்கு சேகரிப்பு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023 04 03

வயநாடு, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார். 

ரோடு ஷோவின் நிறைவில் தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

இந்தியா என்பது ஒரு பூங்கொத்து போன்றது. அதில் உள்ள ஒவ்வொரு பூவையும் மதிக்கவேண்டும், ஏனென்றால் அது முழு பூங்கொத்திற்கும் அழகு சேர்க்கிறது. ஆனால் நாட்டில் ஒரே தலைவர் என்ற கருத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க. திணிக்கிறது. இந்தியாவுக்கு ஒரு தலைவர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயலாகும்.

இந்தியாவில் ஏன் பல தலைவர்கள் இருக்க முடியாது? இந்த எண்ணம்தான் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு. நாட்டு மக்களின் குரல்களை காங்கிரஸ் கேட்க விரும்புகிறது. மக்களின் நம்பிக்கைகள், மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவற்றை நேசித்து மதிக்கிறது. ஆனால் பா.ஜ.க.வோ தலைமையிடம் இருந்து எதையாவது திணிக்க விரும்புகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தால் காலனி ஆவதற்காக நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறவில்லை. இந்தியாவை இந்திய மக்கள் அனைவரும் ஆள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார். கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து