முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. மகளிர் பேட்டிங் தரவரிசை: 10-ம் இடத்திற்கு முன்னேறினார் ஜெமிமா

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      விளையாட்டு
Jemmimah

Source: provided

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி.) ஒருநாள் கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா 814 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவைப் பின்னுக்குத்தள்ளி முதல் முறையாக தனது சிறந்த தரநிலையுடன் முதலிடத்துக்கு லாரா வோல்வார்ட் முன்னேறியுள்ளார். ஸ்மிருதி ஒரு இடம் சரிந்து 811 புள்ளிகளைப் பெற்றுள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக 9 இடங்கள் முன்னேறி 658 புள்ளிகளுடன் 10 இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியா சாம்பியன்... 

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற மகளிருக்கான உலகக் கோப்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிறைவடைந்தது. இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி முதல்முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது. அதிரடியாக ஆடி கடைசிவரைப் போராடிய தென்னாப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் 101 ரன்கள் எடுத்தும், அவரது அணிக்கு பலனளிக்கவில்லை.இறுதிப்போட்டி மட்டுமின்றி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அதிரடி ஆட்டத்தைக் காண்பித்த லாரா வோல்வார்ட் 167 ரன்கள் குவித்திருந்தார். மேலும், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மட்டும் 571 ரன்களைக் குவித்து புதிய சாதனையும் படைத்தார். 

814 புள்ளிகளுடன்...

இந்த நிலையில், ஐ.சி.சி. மகளிருக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் தனது அதிரடியைக்காட்டிய லாரா வோல்வார்ட், 814 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவைப் பின்னுக்குத்தள்ளி முதல் முறையாக தனது சிறந்த தரநிலையுடன் முதலிடத்துக்கு லாரா வோல்வார்ட் முன்னேறியுள்ளார். ஸ்மிருதி ஒரு இடம் சரிந்து 811 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்... 

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய நிர்ணயித்த 339 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து 127 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக 9 இடங்கள் முன்னேறி 658 புள்ளிகளுடன் 10 இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரி 3 இடங்கள் முன்னேறி நியூசிலாந்து வீராங்கனை சோஃபி டிவைனுடன் 7 இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பந்துவீச்சாளர்கள்...

பந்துவீச்சாளர்கள் வரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லஸ்டோன் முதலிடத்தில் தொடருகிறார். தென் ஆப்பிரிக்காவின் மரிஜானே காப் 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் தீப்தி சர்மா 5-வது இடத்தில் தொடருகிறார். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் முதல் 3 இடங்களில் மாற்றமில்லை. ஆஷ்லே கார்னர், மரிஜானே காப், ஹேய்லி மேத்யூஸ் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர். இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். 

ஒருநாள் பேட்டிங் தரவரிசை:

1) லாரா வோல்வார்ட் - 814 புள்ளிகள்.

2) ஸ்மிருதி மந்தனா - 811 புள்ளிகள்.

3) அஷ்லெய் கார்ட்னர் - 738 புள்ளிகள்.

4) நாட் ஷிவர் ப்ரண்ட் - 714 புள்ளிகள்.

5) பெத் மூனி - 700 புள்ளிகள்.

6) அலீசா ஹீலி - 688 புள்ளிகள்.

7) சோஃபி டிவைன் - 669 புள்ளிகள்.

8) எல்லீஸ் பெர்ரி - 669 புள்ளிகள்.

9) ஹேலே மேத்யூஸ்-663 புள்ளிகள்.

10) ஜெமிமா ரோட்ரிக்ஸ் - 658 புள்ளிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து