எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : சிவம்துபேயின் அதிரடி ஆட்டம் , பத்திரானாவின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் தல டோனியின் 20 ரன்கள் ஆகியவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது.
ரச்சின் ரவீந்திரா...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 29-வது லீக் ஆட்டம் (ஏப். 14) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே களமிறங்கினர். ரஹானே 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின், களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ருதுராஜ் - துபே...
இதனையடுத்து, கேப்டன் ருதுராஜ் மற்றும் ஷிவம் துபே இருவரும் களத்தில் இருந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே கடைசி வரை ஆட்டமிழக்காமல் பந்துகளை சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். 38 பந்துகளில் 66ரன்கள் எடுத்த அவர் 10 பவுண்டிரிகள் மற்றும் 2சிக்ஸர்கள் விளாசினார். இறுதி ஓவரில் ஷிவம் துபேயுடன் கைகோர்த்த எம்.எஸ்.டோனி முதல் 3 பந்துகளில் சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டினார். 4பந்துகளில் 20 விளாசிய டோனியின் ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ராஜ விருந்துதான்.
பத்திரானா...
இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு சிஎஸ்கே அணி 206 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் விளையாடி ரன்களை அதிரடியாக குவிக்கத் தொடங்கினர். இஷான் கிஷன் 23 ரன்களுக்கு பத்திரானா பந்துகளில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த வீரர்களும் பத்திரானா பந்துகளுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுகளை பத்திரானாவே வீழ்த்தினார். ஆனாலும் எதற்கும் அசராமல் ஹிட் மேனாக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரோகித் ஷர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் நிதானமாக விளையாடி ரன்களை அதிகரித்தார்.
சேப்பாக்கத்தை...
அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்தது. வெறுமனே 20 ரன்கள் வித்தியாசத்தில்தான் மும்பை அணி தோல்வியை தழுவியது. டோனி அடித்த 20 ரன்கள் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியமான ரன்களாக பார்க்கப்படுகிறது. மும்பை அணி ஹோம் கிரவுண்ட் என அழைக்கப்படும் வான்கடேவில் மஞ்சள் படையின் ஆக்ரோஷமான சப்தங்கள் சேப்பாக்கத்தை பார்த்தது போல் இருந்தது கிரிக்கெட் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இப்போட்டியான ஆட்ட நாயகனாக 4விக்கெட்களை வீழ்த்திய மதீஷ் பத்திரானா தேர்வு செய்யப்பட்டார்.
கெய்க்வாட் புதிய சாதனை
ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆட்டத்தில் அடித்த ரன்களையும் சேர்த்து இதுவரை ஐ.பி.எல். தொடரில் அவர் 57 இன்னிங்சில் 2021 ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற கே.எல் ராகுல் சாதனையை உடைத்துள்ள ருதுராஜ் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் விவரம் வருமாறு., 1. ருதுராஜ் கெய்க்வாட் : 57 இன்னிங்ஸ், 2. கேஎல் ராகுல் : 60 இன்னிங்ஸ், 3. சச்சின் டெண்டுல்கர் : 63 இன்னிங்ஸ், 4. ரிஷப் பண்ட் : 64 இன்னிங்ஸ், 5. கௌதம் கம்பீர் : 68 இன்னிங்ஸ். மேலும் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் கிறிஸ் கெயில், ஷான் மார்ஷ்க்கு அடுத்து 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
31 Oct 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்
31 Oct 2025மதுரை : டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
-
சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜை: 2 மாதங்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
31 Oct 2025கேரளா : சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
31 Oct 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
-
விரைவில் சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி அறிமுகம்
31 Oct 2025கூடலூர் : சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: அமலாக்கத்துறையின் புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
31 Oct 2025திருச்சி : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமலாக்கத்துறை புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
-
பாலஸ்தீனிய கைதிகள் 30 பேரின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்
31 Oct 2025காசா சிட்டி : 30 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்.
-
அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
31 Oct 2025சேலம், அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
ஓ.பி.எஸ்., தினகரன், செங்கோட்டையன் இணைந்த விவகாரம்: நயினார் கருத்து
31 Oct 2025திருநெல்வேலி : ஓ.பி.எஸ்., தினகரன், செங்கோட்டையன் இணைந்திருப்பது குறிதது நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற கேரளா முதியவருக்கு தூக்கு தண்டனை
31 Oct 2025திருவனந்தபுரம் : மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற கேரளா முதியவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
-
கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய கோர்ட்டு உத்தரவு அமலாக்கத்துறை நடவடிக்கை
31 Oct 2025புதுடெல்லி, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிச. 31-ம் தேதி வரை பயணிக்க போக்குவரத்து கழகம் அனுமதி
31 Oct 2025சென்னை : கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிசம்பர் 31-ம் தேதி வரை பயணிக்கலாம் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும்: அமைச்சர் திட்டவட்டம்
31 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.


