முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும்: அமைச்சர் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      இந்தியா
Namachivayam 2024-03-17

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுவையில் மின்கட்டணம் திடீரென மீண்டும் உயர்த்தப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. விட்டு உபயோக கட்டணம் யூனிடுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல் வெளியானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும் என மின்சாரத் துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மின் கட்டணம் நிச்சயமாக உயர்த்தப்படவில்லை. ஒரு யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்த வேண்டும் என ஜே.இ.ஆர்.சி. பரிந்துரை செய்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இதுபோல் ஒரு சூழ்நிலை வந்தபோது புதுச்சேரி அரசு அதனை ஏற்றுக்கொண்டு, அந்த தொகையை மானியமாக மக்களுக்கு வழங்கி வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் புதுச்சேரி அரசாங்கமே கட்டண உயர்வுக்கான மானியத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, அதனை அரசாங்கமே செலுத்தும். இது பொதுமக்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும்” என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து