முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      தமிழகம்
Selvaperundhai 2024-04-19

Source: provided

சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம். மோடி வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பி தேர்தலை சந்திக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்துள்ளார். 

குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் வாக்குச்சாவடி மையம் எண் 272-ல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கடந்த 2 முறை நடந்த தேர்தலை காட்டிலும் இந்தமுறை 2 மடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். இது கட்சிகள் நடத்தும் தேர்தல் இல்லை. 

இந்திய தேசத்தை காப்பதற்கும், நமது மண்ணை பாதுகாப்பதற்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வலிமை பெற்று பாதுகாப்பதற்கு மக்களே நடத்துகின்ற தேர்தல். இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும், ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும். 

நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம். மோடி வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பி தேர்தலை சந்திக்கிறார். இதுதான் அவருக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் அனைவரும் விழிப்போடு இருக்கிறோம். 

மேலும் வாக்குச்சாவடியில் உள்ள முகவர்கள், வழக்கறிஞர்கள் உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர். ஏதேனும் தவறு நடக்கும்பட்சத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க உள்ளோம். மோடியினுடைய மேஜிக் வேலை, திருத்தம் செய்வது மாற்றம் செய்வதுதான். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து