முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      உலகம்
Brahmos 2024-04-20

மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது. 

இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம் செய்தது. இந்தியா - ரஷ்யா கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் நீர் மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள், போர்விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து இலக்கை தாக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. 

இவை ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு அதிவேகமாக செல்லக் கூடியவையாகும். இந்தியா பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதியும் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் கொள்முதல் செய்துள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையே 2022-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி இந்தியாவிடமிருந்து 375 மில்லியன் டாலர்களுக்கு பிரமோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் கொள்முதல் செய்தது. 

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் கொள்முதல் செய்த பிரமோஸ் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து விமானப்படை விமானம் சி-17 மூலம் பிரமோஸ் ஏவுகணை அதற்கான பேட்டரி, உபகரணங்கள் பிலிப்பைன்ஸ் கொண்டு செல்லப்பட்டன.

பிலிப்பைன்ஸ் கொண்டு செல்லப்பட்ட பிரமோஸ் ஏவுகணை அந்நாட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணைகள் மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் உள்ள பிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்பு படைப்பிரிவின் திறன்களை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து