முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      உலகம்
Ukraine-Army-2024-04-24

மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது

ரஷ்யாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் தொடர்ந்து முன்னெடுத்தது. இதன் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த தொடங்கியது. 

மிகப்பெரிய படைபலத்தை கொண்ட ரஷ்யா, ஓரிரு நாட்களில் உக்ரைனை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வாரி வழங்கி வருகின்றன. 

இதன் காரணமாக போர் தொடங்கி 2 ஆண்டுகளை கடந்த பிறகும் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. அதே சமயம் இந்த போரில் உக்ரைன் பெரும் இழப்பையும் சந்தித்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்கள் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டன. அவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் உக்ரைன் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால் உக்ரைனின் முயற்சிகளை முறியடிக்க ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. 3-வது ஆண்டாக தொடரும் இந்த போரில் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இருநாடுகளுமே கட்டாய ராணுவ சேவை திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகின்றன. 

இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் சுமார் 5 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறுகையில், 

மொத்தத்தில், சிறப்பு ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து தற்போது வரையில் உக்ரைன் ஆயுதப்படைகள் கிட்டத்தட்ட அரை மில்லியன் (5 லட்சம்) ராணுவ வீரர்களை இழந்துள்ளன.

உக்ரைன் ராணுவத்தின் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள், 1,000 ஏவுகணைகள், சுமார் 900 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை ரஷியா அழித்துள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து