முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் 25-ம் தேதி 3-ம் கட்டமாக 42 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் : 126 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
Election 2023-11-06

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசாவில் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் மொத்தம் 126 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

ஒடிசாவில் மூன்றாம் கட்ட சட்டப் பேரவைத் தேர்தல் வருகிற 25-ம் தேதி நடைபெற உள்ளது. புவனேஸ்வர், கட்டாக், தேன்கனல், கியோஞ்சார், பூரி மற்றும் சம்பல்பூர் மக்களவைத் தொகுதிகளுடன், இந்தத் தொகுதிகளின் கீழ் உள்ள 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பிஜு ஜனதா தள வேட்பாளர் சனாதன் மஹாகுட் ரூ.227.67 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இவர் சம்புவா தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். 

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் ஒடிசா தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை ஒடிசாவில் 42 சட்டப்பேரவை இடங்களுக்கு போட்டியிடும் 383 வேட்பாளர்களில் 381 பேரின் சொத்து விவர பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்துள்ளன.

அதன்படி, மாநிலத்தில் மூன்றாவது கட்ட சட்டமன்றத் தேர்தலில் 126 வேட்பாளர்கள் (33 சதவீதம்) கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. 

தேர்தல்களில் பணபலத்தின் பங்கு அதிகம் என்பது, அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் பணக்கார வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதன் மூலம் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

காசிபுராவில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும், சௌமியா ரஞ்சன் பட்நாயக்கின் குடும்பச் சொத்து ரூ.122.86 கோடி என்று தெரிய வந்துள்ளது. அவர் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார்.

ரூ.120.56 கோடிகளுடன் மூன்றாவது இடத்தை நாயகர்க் சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் பிரத்யுஷா ராஜேஸ்வரி சிங் பிடித்துள்ளார். முக்கிய கட்சிகளில், பிஜு ஜனதா தளத்தின் 42 வேட்பாளர்களில் 36 பேர், காங்கிரசை  சேர்ந்த 29 பேர், பா.ஜ.க.வைச் சேர்ந்த 28 பேர், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4 பேர் ரூ. ஒரு கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம், ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.47 கோடி ஆக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து