முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழை மக்களின் கஷ்டங்களை போக்குபவர்: பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

Source: provided

புவனேஸ்வர் : நாட்டில் ஏழை மக்களின் கஷ்டங்களை போக்குபவர் பிரதமர் மோடி தான் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

பா.ஜ., சார்பில் சம்பல்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஜவஹர்லால் நேரு துவங்கி, இந்திரா, ராஜிவ் மற்றும் மன்மோகன் சிங் வரை அனைவரும் வறுமையை ஒழிக்கத் தவறிவிட்டனர். நாட்டில் ஏழை மக்களின் கஷ்டங்களை போக்கும் முதல் பிரதமர் மோடி தான்.

பா.ஜ., ஆட்சிக்கு ஓட்டளித்தால் ஒடிசா மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்படும். ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மேலும் அதிகரிக்க தாமரை சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும். நாட்டின் அனைத்து மக்களுக்கும் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கிய ஒரே நாடு இந்தியா. கோவிட் காலத்தில் ஏழை மக்களுக்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை மோடி வழங்கினார்.

ஜி20 மாநாட்டின் போது ஒடிசாவின் பெருமை மற்றும் கலாசாரத்தை மோடி எடுத்துரைத்தார். 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த பிறகு காஷ்மீர் வேகமாக வளர்த்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை மீட்க நாங்கள் நாங்கள் போருக்குச் செல்ல வேண்டி அவசியம் இல்லை. பா.ஜ., இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற அரசியல் செய்கிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து