முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணியுடன் இணைந்த பாண்ட்யா

புதன்கிழமை, 29 மே 2024      விளையாட்டு
Hardik-Pandya 2023 08 02

Source: provided

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க்கில் தங்களது தீவிர பயிற்சியை தொடங்கினர். 

இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனிடையே இந்திய அணியின் துணை கேப்டனான ஹர்திக் பாண்ட்யா, அமெரிக்கா சென்ற வீரர்களுடன் பயணிக்கவில்லை. இது தொடர்பாக பல வதந்திகள் பரவின. இந்நிலையில் தற்போது ஹர்திக் பாண்ட்யா, தனது எக்ஸ் பக்கத்தில், " தேசிய கடமையில்" எனும் தலைப்பில் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  

__________________________________________________________________

அம்பத்தி ராயுடு கணிப்பு

20 அணிகள் பங்கேற்கும் 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன. வருகிற 1-ந்தேதி தொடங்கும் இந்த போட்டிக்காக எல்லா அணிகளும் முழுவீச்சில் தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. இந்த தொடர் தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு, இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவரது கணிப்பின் படி, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுக்கு முன்னேறும் என்று கணித்துள்ளார்.

__________________________________________________________________

இது ரிங்கு சிங்கின் ஆசை 

எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் முதன்மை இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ரிசர்வ் வீரராக மட்டுமே ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டது அவருக்கு வருத்தம் அளித்திருந்தாலும் அடுத்து தன்னுடைய இலக்கு என்ன? என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நான் பேட்டிங் வரிசையில் கீழேதான் இறங்கி பேட்டிங் செய்து வருகிறேன். அணிக்கு எது நல்லது நல்லதோ அதை செய்ய வேண்டும் என்று மட்டும்தான் முடிவு செய்து பேட்டிங் செய்து வருகிறேன். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எனக்கு பேட்டிங் செய்ய அதிகளவு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதேவேளையில் நான் சரியாக பேட்டிங் செய்தேனா? இல்லையா? என்பது முக்கியமல்ல அணியின் நலனுக்காக நான் பின் வரிசையில் களமிறங்கி வெற்றிக்காக போராட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணம். என்னை பொறுத்தவரை எங்கு களமிறங்கினாலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும். நான் எப்போது பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். அணிக்கு அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ அதனை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வேன். மேலும் அவர் தெரிவிக்கையில்., டி20 போட்டிகளில் யார் வேண்டுமானாலும் விளையாடலாம் ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாட அனைவருக்குமே வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்று கூறினார். 

__________________________________________________________________

கோலி, ஜெய்ஸ்வால் குறித்து ஜாபர் 

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் “கோலி மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை தொடங்க வேண்டும் என்பது எனது கருத்து என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்., பேட்டிங் ஆர்டரில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆடாலம். ரோகித், சுழற்பந்து வீச்சை சிறப்பாக ஆடுவார். அதனால் அவருக்கு அந்த இடத்தில் ஆடுவதில் சிக்கல் இருக்காது” என்றார்.

இந்தியா உட்பட 20 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கிறது. மொத்தம் 55 போட்டிகள். குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் என போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய அணி ‘குரூப்-ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் அங்கம் வகிக்கிறது. இந்திய அணி: ரோகித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், சிராஜ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து