முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமை : மாலத்தீவு அதிபர் முய்சு தகவல்

சனிக்கிழமை, 8 ஜூன் 2024      உலகம்
Maldives 2023-12-15

Source: provided

மாலே : மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்

இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மவாகர், இதற்கான அழைப்பிதழை முகமது முய்சுவிடம் வழங்கினார். 

இந்த அழைப்பை முய்சு ஏற்றுக் கொண்டார் என மாலத்தீவு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாகவும், இது இந்தியா-மாலத்தீவு இடையிலான இருதரப்பு உறவுகள் நேர்மறையான திசையில் சென்று கொண்டிருப்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து