முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிதா இசை வெளியீடு

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      சினிமா
Pita-Music 2024-06-10

Source: provided

ஸ்ரீனிக் புரொடக்‌ஷன்ஸ் (SRINIK PRODUCTION) சார்பில் டி.பாலசுப்பிரமணி மற்றும் சி.சதீஷ்குமார் தயாரிப்பில், கார்த்திக்குமார் இயக்கத்தில், தயாரிப்பாளர் வி.மதிழகன் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பிதா’. மாறுபட்ட களத்தில் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது. 

நடிகை வனிதா பேசுகையில், “எனது தண்டுபாளையம் திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ளது, அதைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தின் விழா நடக்கிறது. இங்கு பர்சனலாக ஒரு விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன், எல்லோருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பல பர்சனல் பக்கங்கள் இருக்கும். அதில் நடக்கும் விஷயங்கள் நம்மை முடக்கி விடும். ஆனாலும் அதைத்தாண்டி நல்ல விஷயங்களும் நடக்கும். எக்ஸாம் தோல்வி அடைந்தால் சூசைட், காதல் தோல்வி அடைந்தால் சூசைட் என்ற நிலை இப்போது இருக்கிறது.

ஆனால் அதைத்தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது வெற்றி இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை தொடர்ந்து வாழுங்கள். வெற்றியை எதிர்பார்க்க தேவையில்லை. அது உங்களை வந்தடையும். இப்படம் கதை எனக்கு பிடித்திருந்தது, எனக்கு இதில் பிராஸ்தடிக் மேக்கப், அதை சாதாரணமாக நினைத்து விட்டேன், அதன் பிறகுதான் புரிந்தது மிக மகிழ்ச்சியாக ரசித்து இந்த வேலையை செய்தேன். எல்லோருக்கும் நன்றி.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து