முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேச பிரதமருடன் சோனியா, ராகுல் சந்திப்பு

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Sheikh-Hasina- 2024-06-10

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நேற்று (ஜூன் 10) சந்தித்துப் பேசினர்.பிரதமர் நரேந்திர மோடி பதவியேபு விழாவில் பங்கேற்பதற்காக ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்து தில்லியில் அவர் தங்கியிருந்தபோது, இந்த சந்திப்பு நடைபெற்றது.

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை தில்லியில் சந்தித்தனர். 

ஷேக் ஹசீனாவுக்கும் காந்தி குடும்பத்துக்கும் இடையிலான உறவு அவர்களின் முன்னோர்கள் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேச தலைவருமான ஷேக் முஜிபூர் ரஹ்மான், இந்திரா காந்தியுடன் இணக்கமான சுமூகமான உறவைக் கொண்டவர். 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் போராட்டத்தில் இந்திரா காந்தி வங்கதேசத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தார். அதன் விளைவாக காந்தி குடும்பத்தின் மீது அவர்களுக்கு இணக்கமான பற்று மற்றும் நன்றியுனர்வை வெளிப்படுத்தும் வகையில் பரஸ்பர மரியாதையையும் நீடித்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது அமைச்சரவை உறுப்பினர்கள் சிலருடன் தில்லிக்கு வருகை புரிந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து