எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் நான்கு வயது குழந்தைக்கு ஹெச்9என்2 கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நாட்டின் முதல் பறவைக் காய்ச்சல் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
2019-க்கு பிறகு உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் பறவை காய்ச்சல் தொற்றை அறிவிக்கிற இரண்டாவது முறை இது. குழந்தை குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது. பிப்ரவரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சுவாச கோளாறு, அதீத காய்ச்சல் மற்றும் வயிற்றுக் கோளாறு பிரச்னைகளும் இருந்தன. மூன்று மாதங்களுக்கு பிறகு நலம் பெற்றுள்ள குழந்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வீட்டுக்கு அருகில் உள்ள பண்ணைகளில் இருந்து இந்த தொற்றுக்கு குழந்தை ஆளாகியிருக்கலாம் எனச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தையுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கோ சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்களுக்கோ எந்த தொற்றும் ஏற்பட்டதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
ஹெச்9என்2 என்பது காற்று மூலம் தொற்றக்கூடிய கிருமி. பொதுவாக பறவைகளில் காணப்படும். விலங்குகளுக்கு ஏற்படும் இந்தவகை தொற்றால் மனிதர்களும் சில சமயங்களில் பாதிக்கப்படுகிறார்கள். ஆங்காங்கே உருவாகி வரும் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


