எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்றும், ஹேக் செய்து முடிவுகளை மாற்ற முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. ஆனால், இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று கூறி வழக்குகள் அனைத்தையும் நிராகரித்து விட்டது.
ஆனாலும், குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுவதும், அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிப்பதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.
அதாவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பங்கள் மூலம் முறைகேடு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் அருகில் உள்ள போர்ட்டோ ரிகோ தீவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்ற விவாதம் எழுந்தது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள சிக்கல்கள் குறித்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராபர்ட் எப். கென்னடி ஜூனியர், தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
எலான் மஸ்க்கின் கருத்துக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் தகவல் தொழிநுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து எலான் மஸ்க்கிற்கு கற்றுக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்பான டிஜிட்டல் சாதனத்தை யாராலும் உருவாக்க முடியாது என்பதுபோல் எலான் மஸ்க்கின் கருத்து உள்ளது. இது தவறு.
எலான் மஸ்க்கின் பார்வை அமெரிக்காவிற்கும் பிற இடங்களுக்கும் வேண்டுமானால் பொருந்தும். அங்கு அவர்கள் இணையத்துடன் இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்க வழக்கமான கணினி தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்துவமான அமைப்பாகும். எந்த வகையான நெட்வொர்க் அல்லது மீடியாவுடனும் இணைக்கப்படாதது. புளூடூத் மற்றும் வைபை இணைப்பு கிடையாது. இணைய இணைப்பு இல்லை.
அதாவது உள்ளே நுழைய எந்த வழியும் இல்லை. புரோகிராமை மாற்றியமைக்க முடியாத வகையில் தயாரிக்கப்பட்டவை. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, இந்தியா உருவாக்கியதை போன்று உருவாக்கலாம். இவ்வாறு அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.
இந்த பதிவுக்கு உடனே பதிலளித்த எலான் மஸ்க், எதையும் ஹேக் செய்ய முடியும் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ராஜீவ் சந்திரசேகர், தொழில்நுட்பத்தில் வேண்டுமானால் எதுவும் சாத்தியமாகும். குவாண்டம் கம்ப்யூட்டிங் மூலம், எந்த அளவிலான தரவு பாதுகாப்பு செயல்முறையையும் என்னால் மாற்றியமைக்க முடியும்.
லேப்-லெவல் தொழில்நுட்பம் மற்றும் சில அமைப்புகளுடன், ஜெட் விமானத்தின் காக்பிட்டின் விமானக் கட்டுப்பாடுகள் உட்பட எந்த டிஜிட்டல் வன்பொருள் அல்லது அமைப்புகளை என்னால் ஹேக் செய்ய முடியும்.
ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அப்படி செய்ய முடியாது. இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் இணைந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
02 Mar 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் திட்டவட்ட மறுப்பு
02 Mar 2026தெஹ்ரான், ஈரான் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி தெர
-
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: லெபனானில் 31 பேர் உயிரிழப்பு
02 Mar 2026பெய்ரூட், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து, லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அ
-
ஈரான் - இஸ்ரேல் மோதல்: வான்வெளியை மூடிய ஜோர்டான்
02 Mar 2026அம்மன், மத்தியக் கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஜோர்டான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
-
இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு: கண்காணிக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியது உள்துறை அமைச்சகம்
02 Mar 2026புதுடெல்லி, ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக மாநில அரசுகளுக்கு
-
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி
02 Mar 2026தெஹ்ரான், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர்.
-
இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ரூ.6 லட்சம் கோடிக்கும் மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பு
02 Mar 2026மும்பை, மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
-
போரை முன்கூட்டியே நிறத்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய பிரதமர் நரேந்திரமோடி..!
02 Mar 2026புது டெல்லி, மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தற்போதைய பதற்ற நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார
-
தேர்வை பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து
02 Mar 2026சென்னை, பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள் என்று த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
தூத்துக்குடி தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்
02 Mar 2026சென்னை, தூத்துக்குடி தீப்பெட்டி குடோனில் தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு த
-
சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
02 Mar 2026சென்னை, சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம் நந்தம்பாக்கத்தில் ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உதவி கோரிய தமிழர்கள் 498 பேரும் பத்திரமாக இருப்பதாக அரசு தகவல்
02 Mar 2026சென்னை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக தங்களை மீட்குமாறு அழைத்த இந்தியர்களில் தமிழர்கள் 498 பேர் அழைத்துள்ளதாக தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை
-
தஞ்சையில் நாளை விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
02 Mar 2026தஞ்சாவூர், தஞ்சாவூரில் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் த.வெ.க.
-
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணையும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி
02 Mar 2026லண்டன், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து களம்காண தயாராகயிருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ் டெல்லி பயணம்: தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு
02 Mar 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ் டெல்லி சென்றார்.
-
பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடக்கம்: மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து
02 Mar 2026சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
-
மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்: இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு
02 Mar 2026புது டெல்லி, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
-
உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை, தூதரகங்கள் மூலம் தீர்வுகாண பிரதமர் மோடி வலியுறுத்தல்
02 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்வு காணப்படுவதையே இந்தியா ஆதரித்து வ
-
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் வருகிற 23-ம் தேதி தீர்ப்பு
02 Mar 2026மதுரை, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் வருகிற 23-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை நாங்கள் இன்னும் தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன் தகவல்
02 Mar 2026சென்னை, தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
ஈரானில் ஐ.ஆர்.ஜி.சி.யின் தலைமையகத்தை அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவிப்பு
02 Mar 2026வாஷிங்டன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
-
பிளஸ் 2 தமிழ் பொதுத்தேர்வில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை
02 Mar 2026சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வில் நேற்று நடைபெற்ற தமிழ் பொதுத்தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
02 Mar 2026- திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள், அழகர் கோவில் கள்ளழகர், திருச்செந்தூர் முருகன் ஆகிய கோவில்களில் தெப்பம்.
- திருமோகூர் காளமேகப்பெருமாள் யானை மலையில் சம்ஹார லீலை.
- நத்தம்
-
இன்றைய நாள் எப்படி?
02 Mar 2026


