முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்காவில் வீசிய வெப்ப அலை: ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் பலி

புதன்கிழமை, 19 ஜூன் 2024      உலகம்
Mekka 2024-06-19

Source: provided

ரியாத் : மெக்காவில் வீசிய வெப்ப அலைக்கு ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் உயிரிழந்தனர்.

இஸ்லாமிய மதத்தினர் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மதினாவுக்கு ஹஜ் புனித யாத்திரை செல்வதை தங்கள் முக்கிய மதக்கடமைகளில் ஒன்றாக கருதுகின்றனர். அதன்படி, ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மெக்கா மதினாவுக்கு இஸ்லாமிய மதத்தினர் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் புனிதப்பயணம் தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் சவுதி அரேபியாவின் மெக்காவில் குவிந்து வருகின்றனர்.  

அதே வேளை, சவுதி அரேபியாவின் மெக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. வெப்பம் காரணமாக ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரீகர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு மெக்கா மதினாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்களில் 550 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்துள்ளனர்.  கடுமையான வெப்பம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்து நாட்டை சேர்ந்த யாத்ரீகர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து