Idhayam Matrimony

விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை

புதன்கிழமை, 19 ஜூன் 2024      தமிழகம்
Sahoo-2024-06-19

சென்னை, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று ஆலோசனை நடத்தினார்.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர்.அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில், காணொலி காட்சி வாயிலாக விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி சங்கர்லால் குமாவத், இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், மற்றும் காவல்துறை உதவி தலைவர் (சட்டம் - ஒழுங்கு) என். ஸ்ரீநாத், மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து