முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நா.த.க. வேட்பாளர் உள்பட மேலும் 7 பேர் மனு தாக்கல்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2024      தமிழகம்
Abinaya-2024-06-20

விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். நேற்று நா.த.க. வேட்பாளர் உள்பட மேலும் 7 பேர் மனு தாக்கல் செய்தனர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் 5 வேட்பாளர்களும், 2-ம் நாளில் ஒருவரும், 3-ம் நாளில் ஒருவரும், 4-ம் நாளான நேற்று 10 பேரும் என மொத்தம் 17 வேட்பாளர்கள் 20 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு தாக்கலின் 5-ம் நாளான நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளரான டாக்டர் அபிநயா, அவருக்கு மாற்று வேட்பாளராக அன்னியூரை சேர்ந்த கலைச்செல்வி, தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான ராஜமாணிக்கம், யுனைடெட் ரிபப்ளிக்கன் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் வேட்பாளரான சேகர், தேசிய சமூக நீதிக்கட்சி வேட்பாளரான ஜனார்த்தனன், சுயேச்சை வேட்பாளர்களாக செல்வி, விநாயகம் ஆகிய 7 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மேலும் தாக்கம் கட்சியை சேர்ந்த முத்தையா கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

இவர்களோடு சேர்த்து இதுவரை இத்தொகுதியில் 24 பேர் 28 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று(வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து