முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய பணி நேரம் அமல்

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் இனி காலை 9.15 மணிக்கு பணிக்கு வரவேண்டும் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, இல்லையெனில் அரைநாள் விடுப்பு போடப்படும் என அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். ஆனால் சில ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வருவதாகவும், சீக்கிரமாக புறப்பட்டு செல்வதாகவும் புகார்கள் எழுந்தது. கொரோனா காலத்துக்கு பிறகு பலர் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை பயன்படுத்தவில்லை என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள், காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் பணிக்கு வர வேண்டும். அந்த நேரத்துக்குள் வராத பட்சத்தில் அரை நாள் சாதாரண விடுப்பு கழிக்கப்படும். ஊழியர் ஒரு குறிப்பிட்ட நாளில் அலுவலகத்திற்கு வர முடியாவிட்டால், அதை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் மற்றும் சாதாரண விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். மூத்த அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையைப் பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் தங்கள் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை மற்றும் நேரமின்மையை கண்காணிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து