முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்புதீன் நைப் அபார பந்துவீச்சு: ஆஸி.,யை வீழ்த்தியது ஆப்கான்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      விளையாட்டு
Afghan 2024-05-04

Source: provided

கிங்ஸ்டவுன் : நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப் 1 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது ஆப்கானிஸ்தான். இந்தப் போட்டியில் 21 ரன்களில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

148 ரன்கள்... 

மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் இந்திய நேரப்படி நேற்று காலை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீசியது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தனர். ரஹ்மானுல்லா 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அஸ்மத்துல்லா, இப்ராஹிம் ஸத்ரான், ரஷித், கரீம் ஜனத், குல்புதீன் நைப் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான் 51 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸி. சார்பில் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவர் கடந்த போட்டியிலும் விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தடுமாறிய ஆஸி...

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. நவீன் உல் ஹக் வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். மூன்றாவது ஓவரில் ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷை அவுட் செய்தார் நவீன். வார்னர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். நபி அவரை வெளியேற்றினார். பவர் பிளே ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸி.

127 ரன்களுக்கு... 

அந்த அணிக்கு மேக்ஸ்வெல் ஆட்டம் மட்டுமே ஆறுதல் தந்தது. 41 பந்துகளில் அவர் 59 ரன்கள் எடுத்தார். ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், கம்மின்ஸ், ஆஷ்டன் ஏகர், ஸாம்பா ஆகியோர் ஆட்டமிழந்தனர். 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸி. ஆப்கானிஸ்தான் சார்பில் குல்புதீன் நைப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நவீன் 3, அஸ்மதுல்லா, நபி, ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை குல்புதீன் நைப் வென்றார். இந்தப் போட்டியில் ஆப்கன் அணி பீல்டிங் செயல்பாடு அபாரமாக இருந்தது. அடுத்தப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் வங்கதேசத்துடன் விளையாடுகிறது.

கடவுளுக்கு நன்றி - நயீப்

ஆட்ட நாயகன் குல்பதீன் நயீப் கூறியதாவது., இந்த வெற்றிக்காகவே நீண்ட காலம் காத்திருந்தோம். இது எனக்கு மட்டும் சிறந்த தருணம் அல்ல, என் மக்களுக்கு என் நாட்டுக்கும் சிறந்த தருணம். எங்கள் கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெரிய சாதனை. சொல்ல வார்த்தைகள் இல்லை. எங்களை ஆதரிக்கும் எங்கள் கிரிக்கெட்டை ஆதரிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. கடந்த 2 மாதங்களாக கடினமாக உழைத்தோம். அதன் பலன் இப்போது உங்கள் கண் முன்னால். ஒருவழியாக, கடைசியில் ஆஸ்திரேலியாவையும் ஜெயித்து விட்டோம். கடவுளுக்கு நன்றி.

எங்கள் கிரிக்கெட் பெரிய சாதனைகளை நிகழ்த்தியதில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நிறைய இலக்குகளை எட்டியுள்ளோம். இது பெரிய சாதனை. நாங்கள் முதல் ரவுண்ட்டில் நியூஸிலாந்தை வீழ்த்தினோம். பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதல்ல. அவர்கள் உலக சாம்பியன் அணி. எங்கள் கிரிக்கெட்டுக்கு இந்த வெற்றி பெரிய சாதனை. இந்த வெற்றியை அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற்றுவோம். எங்கள் பயணம் இங்கு ஆரம்பிக்கிறது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து