முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடாமுயற்சி பஸ்ட் லுக் வெளியீடு

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      சினிமா
Persistence-bust-look 2024-

Source: provided

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

'மங்காத்தா' படத்தில் இணைந்து நடித்த அஜித்குமார் - த்ரிஷா - ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மூவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறும்போது, “எங்கள் சிறப்பு தயாரிப்புகளில் ஒன்றான ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது முதல் ரசிகர்கள் இந்த படத்தின் மீது தங்கள் அன்பையும் ஆதரவையும் பெருமளவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டிருக்கிறோம்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் நடுப்பகுதியில் படப்பிடிப்பு முடிவடையும். ரிலீஸ் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து