Idhayam Matrimony

ஜிம்பாப்வே டி-20 தொடர்: இந்திய அணியில் இணையும் சாம்சன், துபே, ஜெய்ஸ்வால்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      விளையாட்டு
Samson -Dubey -Jaiswal 2024

Source: provided

ஹராரே : யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் ஜிம்பாப்வேக்கு எதிரான டி-20 தொடரிம் மீண்டும் இணையவுள்ளதால் சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தாயகம் திரும்புகின்றனர்.

டி20 தொடரில்... 

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

திரும்புவதில் தாமதம்... 

முன்னதாக இந்த தொடரில் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். ஆனால், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரு போட்டிகளுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்...

அதில் முதல் போட்டியில் அணியில் விளையாடும் வாய்ப்பை பெறாத சாய் சுதர்சனுக்கு 2-வது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அந்தப் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல் 2 டி20 போட்டிகளில் மட்டுமே அணிக்கு தேர்வாகியிருந்த சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தாயகம் திரும்ப உள்ளனர். ஏனெனில் கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து