முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற நுழைவுத்தேர்வு : ஏராளமானோர் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      தமிழகம்
Palus-2 2024-05-06

Source: provided

சென்னை : மத்திய அரசு பணிகளில் விண்ணப்பித்தவர்கள் பயிற்சி வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி 11 மணிக்கு நிறைவடைந்தது. 

நான் முதல்வன் திட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான தனி பிரிவை இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் 7-ம் தேதி தொடங்கி வைத்தார். மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழக இளைஞர்கள் எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்களை இந்த பிரிவு செயல்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி ஆகிய தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும் என்று 2024-25-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 

அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வங்கிப் பணிகள், ரயில்வே, மத்திய பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இத்தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி 11 மணிக்கு நிறைவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து