முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் திருவுருவ படத்துக்கு மத்திய இணையமைச்சர் மலர்தூவி மரியாதை

புதன்கிழமை, 17 ஜூலை 2024      தமிழகம்
Ramdas-Atwale 2024 07 17

Source: provided

சென்னை : சென்னை அயனாவரத்தில் உள்ள பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு சென்ற மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆம்ஸ்ராங்கின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். 

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்றார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மேலும் அங்கிருந்த ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலர் தூவி ராம்தாஸ் அத்வாலே மரியாதை செலுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து