முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு மண்டல ஐ.ஜி. நேரில் ஆஜராக ஊட்டி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      தமிழகம்
Ooty-Court

ஊட்டி, ஊட்டி கோர்ட்டில் மேற்கு மண்டல ஐ.ஜி. நேரில் வரும் 29-ந் தேதி ஆஜராக சம்மன்  பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் மின்வாரியம் மூலம் கடந்த 2016-ம் ஆண்டு மின் கம்பங்கள் நடப்பட்டன. அப்போது அங்கிருந்த வியாபாரிகள் சிலர் மின் கம்பங்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் மின்வாரிய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் விநாயகன்  தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில்  இந்த வழக்கின் விசாரணைக்காக விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் விநாயகத்திற்கு நீதிமன்றத்திலிருந்து பலமுறை அழைப்பாணை  கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து பிணையில் வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து, தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அரசு பிடிவாரண்டை மேற்கு மண்டல ஐஜி அலுவலகம்  மூலமாக நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது.

இது சம்பந்தமாக நீதிமன்றத்திலிருந்து நினைவூட்டுதல் கடிதம் அனுப்பப்பட்டது. சாட்சியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதால், இந்த வழக்கில் ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை பரிந்துரைக்க கூடாது என விளக்கம் தரும்படி‌ மேற்கு மண்டல ஐஜியை வரும் 29-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி தலைமை குற்றவியல் நீதிபதி செந்தில்குமார் வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்கு மண்டல ஐஜிக்கு நேரில் ஆஜராகும்படி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து