முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 24 பேர் உயிரிழப்பு : மாயமான 25 பேரை தேடும் பணி தீவிரம்

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      இந்தியா
Kerala-2024-07-30

Source: provided

திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 25 தமிழர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை கொட்டியதன் காரணமாக கடந்த 30-ந்தேதி முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் 94 நிவாரண முகாம்களில் உள்ளனர். 600-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் தெரிய வந்தது. அவர்களை மீட்பதற்கான பணிகள் நேற்று (சனிக்கிழமை) 5-வது நாளாக நடந்தது. இதுவரை 361 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 295 பேர் இதுவரை காணவில்லை. அவர்களில் 250 பேர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மொத்தம் 640 குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளன. நவீன எந்திரங்கள், மேம்படுத்தப்பட்ட சென்சார் கருவிகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சேறு மற்றும் இடிபாடுகள் குவிந்து கிடக்கும் பகுதிகளில் தேடுதல் தொடர்கிறது. நேற்றைய தேடுதலில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த மேலும் சிலரது உடல்களும் மீட்கப்பட்டன. இதனால் நேற்று பலி எண்ணிக்கை 361 ஆக உயர்ந்தது.

நிலச்சரிவில் உயிர்தப்பியவர்கள் மற்றும் அரசு பராமரித்து வரும் ஆவணங்களின் அடிப்படையில் மாயமானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் 250 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது. எது எப்படியென்றாலும் கடைசி நபர் மீட்கப்படும் வரை தேடுதல் பணியை தொடர கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்கிடையே வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பலர் வயநாட்டில் நிரந்தரமாக தங்கி வேலை செய்து வருகிறார்கள். பலர் வேலை நிமித்தமாக சென்று தற்காலிகமாக குடியேறியுள்ளனர். இவர்களில் நிரந்தரமாக அங்கு குடியேறிய தமிழர்கள் 21 பேரும், வேலைக்கு சென்று தங்கிய காளிதாஸ், கல்யாண், சிராபுதீன் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த 24 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீரன் தலைமையிலான மீட்பு குழுவினர் வயநாடு சென்று அங்கு பாதிப்புக்குள்ளான தமிழர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இதில்தான் 24 தமிழர்கள் உயிரிழந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. இவர்களை தவிர தமிழகத்தை சேர்ந்த 25 பேர் மாயமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில் நிரந்தரமாக வயநாட்டில் தங்கியவர்கள் 22 பேர் ஆவர். வேலைக்காக சென்ற 3 பேரும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் முகாம்களில் 130 தமிழர்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து