Idhayam Matrimony

புதுச்சேரி மாநில ஆளுநராக கைலாஷ்நாதன் பதவியேற்பு : முதியோர் உதவித்தொகை கோப்பில் முதல் கையெழுத்து

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2024      இந்தியா
Kailash-Nathan 2024 08 07

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் நேற்று பதவியேற்று கொண்டார்.  பதவியேற்றதும் முதியோர் உதவித்தொகை கோப்பில் முதலில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார்.

யூனியன் பிரதேசமான புதுவையில் துணைநிலை ஆளுநரே நிர்வாகியாக அழைக்கப்படுகிறார். ஆளுநரின் அனுமதி பெற்றே அரசின் அனைத்து செயல்பாடுகளும் நடக்கிறது. அதே சமயம், 2021-ம் ஆண்டுக்குப் பிறகு புதுவைக்கு மட்டுமான தனி ஆளுநர் நியமிக்கப்படவில்லை. தனி ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கத்துக்கு பிறகு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை புதுவையின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டார்.

இவர் சுமார் 3 ஆண்டுகள் ஆளுநராக பதவி வகித்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழிசை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு புதுவை பொறுப்பு ஆளுநர் பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது. இதனால் சுமார் மூன்றரை ஆண்டுக்கும் மேலாக புதுவைக்கு தனி ஆளுநர் இல்லாமல் பொறுப்பு ஆளுநர்களே பதவி வகித்து வந்தனர்.  

இந்த நிலையில், புதுவையின் பொறுப்பு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அண்மையில் மகராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து புதுவையின் புதிய ஆளுநராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாஷ்நாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். 

அதைத் தொடர்ந்து நேற்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தலைமைச் செயலாளர் சரத்சவுகான், புதிய ஆளுநராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டதற்கான ஜனாதிபதியின் உத்தரவை வாசித்தார்.  

இதையடுத்து சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், புதிய துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இதையடுத்து முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணக்குமார், எதிர்கட்சித் தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அரசுச் செயலர்கள், உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் நேரில் புதிய ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். 

அதைத்தொடர்ந்து தனது அறைக்குச் சென்ற ஆளுநர், முதியோர் உதவித்தொகை தொடர்பான கோப்பில் முதல் கையெழுத்திட்டு தனது  பணியை தொடங்கினார். பின்னர் விருந்தினர்களுடன் ஆளுநர் கைலாஷ்நாதன் தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து