முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துனிஷியாவில் புதிய பிரதமர் நியமனம்: ஜனாதிபதி அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      உலகம்
Tunisia 2024 08 08

Source: provided

துனிஸ் : துனிஷியா நாட்டின் பிரதமராக இருந்தவர் அகமது ஹச்சானி.  அவரை அந்நாட்டின் ஜனாதிபதி கெய்ஸ் சயீத் பதவியில் இருந்து நீக்கினார்.  இந்நிலையில், அவருக்கு பதிலாக சமூக விவகார அமைச்சர் கமல் மதூரியை புதிய பிரதமராக, ஜனாதிபதி சயீத் நியமித்து உள்ளார்.

எனினும், இந்த முடிவில் வேறு விவரங்களை ஜனாதிபதி அலுவலகம் வெளியிடவில்லை.  கடந்த மே மாதத்தில் அரசாங்கம் பகுதியளவு மாற்றியமைக்கப்பட்டது.  அதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டு மே 25-ம் தேதி சமூக விவகார துறை அமைச்சராக மதூரி நியமிக்கப்பட்டார்.

1974-ல் பிறந்தவரான மதூரி, அதற்கு முன் தேசிய சுகாதார காப்பீடு நிதியமைப்புக்கான தலைவராக பதவியில் இருந்துள்ளார்.  கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஹச்சானி பிரதமராக நியமிக்கப்பட்டார். 

வருகிற அக்டோபர் 6-ம் தேதி துனிஷியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.  5 ஆண்டு கால பதவிக்கான இந்த தேர்தலில் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக ஜனாதிபதி கெய்ஸ் சயீத் மீண்டும் போட்டியிடும் முடிவில் உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து