முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் மகிழ்ச்சியே முக்கியம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார் : அமைச்சர் உதயநிதி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2024      தமிழகம்
Udayanidhi 2024-09-03

Source: provided

திருவொற்றியூர் : எத்தனை சிக்கல்கள் வந்தாலும் தமிழக மக்களின் மகிழ்ச்சியே  முக்கியம்  என முதல்வர் கூறியுள்ளார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

திருவொற்றியூர் தொகுதியில் வீட்டுமனை பட்டா இல்லாமல் இருந்த பொதுமக்கள் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதனை ஏற்று உடனடியாக அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் முதல் கட்டமாக 2 ஆயிரத்து 100 குடும்பங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

கலைஞர் ஆட்சி காலத்தில் 1970-ல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை தொடங்கினார்.இதன் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் ரூ. 920 கோடி செலவில் 60 குடியிருப்புகளை ஆன்லைன் மூலம் முதல்வர்  திறந்து வைத்துள்ளார்.

தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் வடசென்னை பகுதியில் ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. பட்டா வேண்டும் என்ற பல வருட கனவு தற்போது நிறைவேறியுள்ளது. 

சென்னையில் பட்டா பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளது. மூன்று மாதத்திற்குள் பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் வாக்குறுதியை செயல்படுத்தி உள்ளார். எத்தனை சிக்கல் வந்தாலும் பரவாயில்லை. மக்களுடைய மகிழ்ச்சிதான் முக்கியம் என்று முதல்வர்   கூறி உள்ளார். 

தரமான கல்வி, சுகாதாரம் என்று இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளோம். அரசின் பிராண்ட் அம்பாசிடர் மக்களாகிய நீங்கள்தான். இந்த அரசை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கலாநிதி வீராசாமி எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம் ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், எபினேசர், துணை மேயர் மகேஷ் குமார், மண்டலக் குழு தலைவர்கள் தனியரசு, ஆறுமுகம், பகுதி செயலாளர் அருள்தாசன், பூச்சி முருகன், புழல் ஒன்றிய செயலாளர் வக்கீல் சரவணன், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த், சிறப்பு அதிகாரி மதுசூதன் ரெட்டி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து