முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியத்தில் சிவாஜி சிலை உடைந்த வழக்கில் சிற்பி கைது

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      இந்தியா
Shivaji-statue-2024-09-05

ராய்கட், மராட்டியத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை  விழுந்த விவகாரத்தில் சிலை செய்த சிற்பியை போலீசார் கைது செய்தனர். 

மராட்டிய மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் மாதம் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 35அடி உயரம் கொண்ட இந்த சிலை திறந்து வைக்கப்பட்ட 8 மாதங்களில் கடந்த மாதம் 26-ம் தேதியன்று கனமழைக்கு தாக்குப்பிடிக்காமல் இடிந்து விழுந்தது.

திறக்கப்பட்ட 8 மாதங்களில் சிலை உடைந்து விழுந்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  கண்டனம் வழுத்ததை அடுத்து சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்காக பிரதமர் மோடியும் மன்னிப்பு கோரினார். 

இதற்கிடையே சிலையை வடிவமைத்த சிற்பி ஜெய்தீப் ஆப்தே என்பவர் மீது மராட்டிய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். அவரை கண்டுபிடிக்க முடியாததால் லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தானே மாவட்டத்தில் சிற்பி ஜெய்தீப் ஆப்தேவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதனிடையே திட்ட குறைபாடே சத்ரபதி சிவாஜி சிலை சேதமடைய காரணம் என்று மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான நிதின் கட்காரி கூறியிருக்கிறார். துருப்பிடிக்காத எஃகு மூலம் சிலை தயாரிக்கப்பட்டு இருந்தால் அது சேதம் அடைந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து