முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தில் ஏசி இயங்காததால் அவதி: பயணிகளிடம் மன்னிப்பு: கோரிய இண்டிகோ நிறுவனம்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      இந்தியா
Indigo

புதுடில்லி,  டில்லியில் இருந்து வாரணாசி வந்த இண்டிகோ விமானத்தில் ஏசி செயல்படாததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியது.

விமானத்தில் பயணிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், அது சொகுசு ஆனதாக இருக்கும் என பலரும் எண்ணிக் கொண்டு உள்ளனர். ஆனால், சில நேரங்களில் அப்படி அமைவது கிடையாது. அதில், ஒன்றாக, கடந்த 5ம் தேதி தேசியத் தலைநகர் டில்லியில் இருந்து உ.பி.,யின் வாரணாசிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏசி செயல்படவில்லை. ஊழியர்களால் அதனை சரி செய்ய முடியவில்லை. இதனால் பயணிகள் வியர்த்து கொட்டியதால் கடும் அவதிக்குள்ளாகினர். சிலர் கைகளில் இருந்த புத்தகங்களை வைத்து விசிறி கொண்டனர். ஒருவர் ஏசியை சரி செய்ய முயன்றும் அது பலனளிக்கவில்லை. இதனால், ஊழியர்களுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விமானத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அவதியை, பயணிகள் 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் பதிவிட துவங்கினர். கருத்துகளாகவும், புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் வெளியிட்டனர். இதனையடுத்து இண்டிகோ நிறுவனம், பயணிகளிடம் மன்னிப்பு கோரி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து