முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்டில் இன்னும் 8 சிக்ஸர்கள்தான்: புதிய சாதனையை படைக்க ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024      விளையாட்டு
Jaiswal 2024-02-02

Source: provided

புதுடெல்லி : வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ள நிலையில், ஜெய்ஸ்வால் இன்னும் 8 சிக்ஸ் மட்டும் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைப்பார்.

இந்திய அணி...

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. வரும் 19ம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டது.

ஜெய்ஸ்வால்....

இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தோடு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததோடு 712 ரன்கள் குவித்து மிகப்பெரிய சாதனை படைத்தார். இதன் மூலமாக இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாகவும் அமைந்தார்.

அதிக சிக்சர்கள்.... 

இதன் மூலம் இந்திய அணியில் நிலையான இடத்தை தக்க வைத்து கொண்ட ஜெய்ஸ்வால் எதிர்வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் உலக சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 26 சிக்சர்களை அடித்திருக்கும் ஜெய்ஸ்வால், இன்னும் 8 சிக்சர்கள் அடிக்கும் பட்சத்தில் ஒரு காலாண்டர் ஆண்டில் டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

பிரண்டன் மெக்கலம்...

இதற்கு முன்னதாக 2014-ம் ஆண்டு நியூசிலாந்து அணியை சேர்ந்த பிரண்டன் மெக்கலம் 33 சிக்சர்களை அடித்ததே இதுவரை அதிகபட்ச சாதனையாக இருக்கிறது. இந்திய அணி இந்த ஆண்டில் வங்காளதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட், நியூசிலாந்திற்கு எதிராக 3 டெஸ்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் (1 டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது) போட்டிகளில் ஆட உள்ளதால் இந்த சாதனையை ஜெய்ஸ்வால் எளிதில் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து