முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      இந்தியா
Sitaram-Yechury 2024-09-10

புதுடெல்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரின் உடலில் ஏற்பட்டுள்ள நோயின் தீவிரத்தன்மை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த இக்கட்டான சூழலில், மருத்துவமனையின் அனைத்து துறை சிறப்பு மருத்துவர்கள் குழு, அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். சீதாராம் யெச்சூரிக்கு அண்மையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து